திருவள்ளூர் அருகே ஊத்துக்கோட்டையில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரமாகப் போராடி தீயை அணைத்தனர்.
இதில் சென்னை மெட்ரோ வாட்டர் உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் வீடு உள்ளிட்ட ஐந்து வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின. மேலும் இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து ஊத்துக்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மின் வயரில் உரசிய லாரி தீப்பற்றி எரிந்தது!