திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த விச்சூர் சாலையிலுள்ள சிட்கோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியில் ராபர்ட் என்பவருக்கு சொந்தமான உணவு பொருள் தயாரிக்கும் கிடங்கு செயல்பட்டுவருகிறது(ALLASTIR API MULTIVITAMIN FOOD AND PRODUCTS). இங்கு தயாரிக்கப்படும் பொருள்கள் ஆந்திராவில் உள்ள நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (செப் 20) காலை திடீரென மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்து மளமளவென குடோன் முழுவதும் பரவியது. உடனடியாக காவல் துறைக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த மணலி, மாதவரம், மணலி புதுநகர், அத்திப்பட்டு, திருவொற்றியூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட தீயணைப்பு வாகனங்கள் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயணைக்க முற்பட்டனர்.
சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனால் அதற்குள் தீ முழுவதும் பரவி குடோன் தீயில் கருகி நாசமாகியது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து மணலி புதுநகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் கௌதம் குமார் மறைவு - முதலமைச்சர் இரங்கல்!