ETV Bharat / state

நெகிழி விற்பனை செய்த கடைக்கு 50 ஆயிரம் அபராதம்!

திருவள்ளூர்: அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பதுக்கி விற்பனை செய்த கடைக்கு 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நெகிழி விற்பனை செய்த கடைக்கு 50 ஆயிரம் அபராதம்!
நெகிழி விற்பனை செய்த கடைக்கு 50 ஆயிரம் அபராதம்!
author img

By

Published : Mar 12, 2020, 7:41 AM IST

தமிழ்நாடு அரசு நெகிழிப் பொருள்களை பயன்படுத்தக்கூடாது என தடைவிதித்து, அதற்கு மாற்றுப் பொருள்களையும் அறிவித்து அதைப் பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. அதேநேரத்தில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் வணிகர்களுக்கு எச்சரித்திருந்தது. தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது.

இந்நிலையில், திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்வதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையர் சந்தானம் லட்சுமி டிரேடர்ஸ் என்ற மொத்த விற்பனைக் கடையை ஆய்வு செய்தார்.

தடை செய்யப்பட்ட நெகிழியை விற்பனை செய்த கடையில் ஆய்வு செய்யும் அலுவலர்கள்.

அதில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. கடையிலிருந்த ஒரு டன் எடை கொண்ட நெகிழியைப் பறிமுதல் செய்த நகராட்சி ஆணையர் சந்தானம், கடை உரிமையாளர் சீனிவாசனுக்கு 50,000 அபராதம் விதித்ததோடு, இனிவரும் காலங்களில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

இதையும் படிங்க...தமிழ்நாடு பாஜக தலைவராக எல். முருகன் நியமனம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.