திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட வடதில்லை, மாம்பாக்கம்,பேரிட்டி வாக்கம், வேலகாபுரம் கிராம மக்கள் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக ஆரணி ஆற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் நிறைவேற்றவில்லை.
இதனால் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க போவதோடு, ஆதார் அட்டை , குடும்ப அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் திரும்ப அளிக்கவுள்ளோம் எனத் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய கரும்பு விவசாயிகள், மாவட்ட நிர்வாகம் கரும்பு அறுவடையை முறைப்படுதத்த வேண்டும், பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் முறையாக இழப்பீடு வழங்க கூடிய விரைவில் நடவடிக்கை வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக தடுப்பணை கட்டாததை கண்டித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: முல்லை பெரியாற்றில் தண்ணீர் திறக்க வேண்டி விவசாயிகள் போராட்டம்!