ETV Bharat / state

ஆடு மேய்த்துக்கொண்டிருந்த விவசாயி மின்னல் தாக்கி உயிரிழப்பு - farmer dies after attacked by lightning in tiruvallur

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை கிராமத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த விவசாயி மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படு்த்தியுள்ளது.

farmer dies after attacked by lightning in tiruvallur

author img

By

Published : Jun 28, 2020, 4:31 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கையா (50). இவர் அப்பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது இடி, மின்னலுடன் திடீரென கனமழை பெய்தது.

செங்கையா அருகே இருந்த மாந்தோப்பில் ஆடுகளோடு சேர்ந்து மழைக்கு ஒதுங்கினார். அந்நேரத்தில் திடீரென இவர் மீது மின்னல் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே செங்கையா உயிரிழந்தார். அதுமட்டுமின்றி இரண்டு ஆடுகளும் உயிழந்தது.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின்பேரில், காவல்துறையினர் செங்கையாவின் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் பூவலை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க... பிகாரில் மின்னல் தாக்கியதில் 83 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.