திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அகூர் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் சம்பங்கி பூ விவசாயம் பயிரிட்டு வருகிறார்.
பெரும்பாலான விவசாயிகள் வறுமையில் சிக்கித் தவிப்பது வாடிக்கையாகி வரும் சூழலில், இவரும் வறுமையின் பிடியில் சிக்கி உழவு பணிக்கு பயன்படுத்த இயந்திரங்கள் வாங்க முடியாத சூழல் உள்ளார்.
இதனால், தனது சைக்கிளை உழவு இயந்திரமாக பயன்படுத்தி அதனை தனது 11 வயது மகனை வைத்து விவசாயத்தில் ஈடுபட்டு உழவு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
படிப்பு ,பட்டம், உயர்பதவி, சொகுசு வாழ்க்கை என நவீன உலகத்தை நோக்கி பயணிக்கிறான் மனிதன். ஆனால், சோற்றில் கால் வைத்தால்தான் கால் வயிறு கஞ்சி கிடைக்கும் என்பதை சொல்லாமல் சொல்லி விவசாய நிலத்தில் கால் பதித்து உணர்த்துகின்றன இந்த பிஞ்சு பாதங்கள்.
இதுபோன்ற விவசாயிகளுக்கு வறுமையை கருதி அரசு மானிய விலையில் எந்த ஒரு ஆவணமும் எதிர்பார்க்காமல் விவசாய இயந்திரங்கள் வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: ஸ்டேன் சுவாமி மரணம்: வருத்தம் தெரிவித்த ஐநா மனித உரிமை ஆணையம்