திருவள்ளூர் மாவட்டம் சென்னை - திருப்பதி சாலையில் உள்ள அரண்வாயில் குப்பம் பகுதியில் சமீபத்தில் புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டது. இந்த வேகத்தடை அந்தச் சாலையில் அமைக்கப்பட்டதை அறியாமல், தினமும் வேலைக்குச் செல்லக்கூடிய ஊழியர்கள், வேகமாக இருசக்கர வாகனத்தில் செல்வதால் விபத்து ஏற்படுவது வாடிக்கையாகிவருகிறது.
இந்நிலையில், ஒண்டிக்குப்பம் பகுதியில் வசித்துவந்த ஹரிஷ் (24) என்ற தனியார் தொலைக்காட்சி ஊழியர் இருசக்கர வாகனத்தில் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி வேகமாக சென்றபோது புதிய வேகத்தடையைக் கவனிக்காததால் விபத்து ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி - மழை கிராமங்களில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தொடக்கம்
இந்த விபத்தில் ஹரிஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்பே உயிரிழந்தார். இது குறித்து நமது ஈடிவி பாரத் செய்தி வெளியானது. இதையறிந்த அரசு அலுவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரடியாக விரைந்து வேகத்தடையை அகற்றினர்.
தொடர்ந்து இந்த முக்கியச் சாலையில் இருக்கக்கூடிய 15-க்கும் மேற்பட்ட வேகத்தடைகளை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடை: கவனிக்காமல் வாகனத்தில் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்!