திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் அமைந்துள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், சுமார் 300-க்கும் மேற்பட்டோர் நிரந்தர தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் கொடுக்கப்படாததால் நிர்வாகத்தினரிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால், இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், நிர்வாகத்தைக் கண்டித்து, சர்க்கரை ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். மேலும், தங்களுக்கு இரண்டு மாதம் ஊதியம் வழங்கும் வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நெட்வொர்க் பிரச்னை: செல்போன்களுக்கு அஞ்சலி செலுத்தி போராட்டம்!