திருவள்ளூர்: சிவன்வாயில் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர் (40). இவர் அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், உயர் அலுவலர்களுடன் இவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக ஆலத்தூர் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இழப்பீடு வழங்கக் கோரிக்கை
சுதாகர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக, தனது சாவுக்கு காரணம் குறித்து ஆடியோ மற்றும் கடிதம் எழுதிவைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சுதாகரின் உறவினர்கள் தொழிற்சாலை நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி திருநின்றவூர்- பெரியபாளையம் நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்தது முத்தாபுதுப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்படவே சாலைமறியலை கைவிட்டனர். இதனால் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மரணமடைந்த தூய்மை பணியாளர் குடும்பத்துக்கு இழப்பீடு