திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே திருவலாங்காடு ஒன்றியத்திற்குள்பட்ட பழையனூர் கிராமத்தில் கோயில் கட்ட அங்கிருந்த பொதுமக்களால் முடிவுசெய்யப்பட்டது.
இதற்காக அங்கிருந்த ஏரியிலிருந்து மண் அள்ளுவதற்கு கிராம இளைஞர்கள் பள்ளம் தோண்டினர். அப்பொழுது பழங்கால முதுமக்கள் தாழி, மண்பாண்டங்கள், தண்ணீர் பிடிக்கும் குவளைகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன.
இப்பொருள்களைப் பத்திரமாக மீட்ட மக்கள் பின் கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் அளித்தனர். இந்தப் பொருள்களை தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ளுவதற்கும் மண்பாண்டங்களை அறிவியல் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கவும் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.