ETV Bharat / state

தேர்தல் பறக்கும் படை வாகனம் விபத்து: தலைமைக் காவலர் உயிரிழப்பு! - EC flying squad vehicle accident

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே தேர்தல் பறக்கும் படையினர் சென்ற வாகனம் விபத்தில் சிக்கி தலைமைக் காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

EC flying squad vehicle met an accident near Thiruvallur
author img

By

Published : Apr 10, 2019, 9:39 AM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்முடிபூண்டி தேர்தல் பறக்கும் படை பிரிவு வாகனம் புதுவாயல் அருகே சென்ற போது எதிரே வந்த லாரி ஒன்று அதனை மோதும் நிலையில் வந்துள்ளது. இதனால் சாலையோரமாக சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் தலைமைக் காவலர் கோவிந்தசாமி (54) பரிதாபமாக உயிரிழந்தார். இவருடன் காரில் சென்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் (44), ஓட்டுநர் கண்ணன், காவலர்கள் கமலநாதன் (37), லாசர் (54), இந்துமதி (21) ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த காவலர் கோவிந்தசாமியின் உடல் பொன்னேரி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து கவரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

10-04-2019

திருவள்ளூர் மாவட்டம் செய்தியாளர் சுரேஷ்பாபு

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே தேர்தல் பறக்கும் படையினர் சென்ற வாகனம் விபத்தில் சிக்கி அதில் பயணித்த தலைமை காவலர் உயிரிழப்பு லேசான காயங்களுடன்  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்எஸ்ஐ பெண் காவலர் உள்ளிட்ட ஐந்து பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்பொன்னி நேரில் சென்று விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் கும்முடிபூண்டி தேர்தல் பறக்கும் படை பிரிவில் பணியாற்றிய போது புது வாயல் அருகே லாரியை மோத முயன்றபோது சாலையோரம் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்த தலைமைக் காவலர் கோவிந்தசாமி 54 தேர்தல் பணிக்காக வெங்கல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த கோவிந்தசாமி  கும்மிடிப்பூண்டி தேர்தல் பறக்கும் படையில் பணியில் இருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் இவருடன் காரில் சென்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் 44 கண்ணன் ஓட்டுநர் 
காவலர்கள்
கமலநாதன் 37 லாசர் 54 பெண் காவலர் இந்துமதி 21 ஆகியோர் லேசான காயம் அடைந்தனர் 
உயிரிழந்த தலைமைக் காவலர் கோவிந்தஸ்வாமி பெரியபாளையம் அருகே உள்ள தொள வேடு கிராமத்தைச் சேர்ந்தவர் இவருக்கு லீலாவதி என்ற மனைவியும் திருமணமான 3 மகள்கள் உள்ளனர் அதிகாலை 4 மணி அளவில் லாரியை முந்தி செல்ல முயன்ற போது எதிரே வாகனம் வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க சாலையோரம் இருந்த மரத்தில் மோதி தேர்தல் பறக்கும் படையினர் சென்ற கார் விபத்தில் சிக்கி உள்ளது இதில் உயிரிழந்த  காவலர் கோவிந்தசாமி உடல் பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது விபத்து  குறித்து கவரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தேர்தல் பறக்கும் படையினர் சென்று விபத்தில் சிக்கி தலைமைக் காவலர் கோவிந்தசாமி  உயிரிழந்த சம்பவஇடத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியர்  மகேஸ்வரி ரவிக்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை செய்ததுடன்  லேசான காயங்களுடன் உயிர் தப்பிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ssi மற்றும் பெண் காவலர் உள்ளிட்ட 5 சிகிச்சை அளிக்கவும் முழு உடல் பரிசோதனை செய்யவும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.