தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று (நவ.11) மாலை 5.15 மணியளவில் தொடங்கி இரவு 7.45 மணி அளவில் முழுவதுமாக கரையைக் கடந்தது.
இந்நிலையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தாலும் நாளை (நவ.12) மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் நான்கு நாள்கள் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதன் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ.12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாளை (நவ.12) ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: TN Weather Update: காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது