திருவள்ளூர்: கனகம்மாசத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ள மதுபானக் கடையில்
மது வாங்குவதற்காக மதுப்பிரியர்கள் அப்பகுதியில் ஓடும் மழை வெள்ள நீரைக் கடந்து, ஆபத்தான முறையில் மதுவை வாங்கிச் செல்கின்றனர்.
குடிநீருக்காக பெண்கள் கஷ்டப்பட்டு பல கிலோ மீட்டர் நடந்து சென்று நீரைப் பிடித்து, குடங்களை சுமந்துவரும் நிலையில், இந்த மதுப்பிரியர்கள் குடிப்பதற்காக வெள்ளத்தில் தள்ளாடிச் சென்று மதுப் பாட்டில்களை வாங்கி வருவது பெரும் சிரமமாக இருப்பதாகக் கூறி புலம்புகின்றனர்.
அட்ராசிட்டி(Atrocity) செய்யும் மதுப்பிரியர்கள்
மேலும், சிரமத்தைக் குறைக்க அங்கு சாலை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கும் மதுப்பிரியர்கள் பாட்டில் ஒன்றுக்கு, பத்து ரூபாய் அதிகமாக வாங்குவதாக குற்றச்சாட்டையும் முன் வைக்கின்றனர்.
தொடர்ந்து, வெள்ளத்தில் சிக்கி ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் தங்கள் குடும்பத்திற்கு யார் பதில் சொல்வது?
என முதல்வன் பட அர்ஜூன் ரேஞ்சுக்கு அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: Thenpennai river Drone visuals: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் - கழுகுப் பார்வை காட்சிகள்