திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது பேசிய அவர், "திமுக ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தண்டனையை நிறைவேற்ற தீர்மானம் நிறைவேற்றி விட்டு, இப்போது பொய் கூறிவருகிறது. ஏழு பேர் விடுதலை குறித்து அதிமுகதான் தீர்மானம் நிறைவேற்றியது. திமுக இரட்டை வேடம் போடுகிறது, மக்களை ஏமாற்றுகிறது.
தமிழ்நாட்டில் ஏழை என்ற சொல் எதிர்காலத்தில் இருக்காது. ஏழைகளுக்கு வீடில்லாத நிலை எதிர்காலத்தில் இருக்காது. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் யாரும் நிம்மதியாக இருக்க முடியாது. பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது. திமுக ஆட்சியில் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்தியாவில் தொழில் முதலீட்டை அதிகமாக ஈட்டியது தமிழ்நாடு தான். வீட்டு மனை இல்லாத அனைவருக்கும் பட்டா வழங்கப்படும். குடிமராமத்து பணியால் நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கி விவசாயம் செழிக்கிறது. தேர்தல் நேரத்தில்தான் கட்சிகள் வாக்குறுதிகள் தரும். என் தலைமையிலான அரசு விவசாயிகளின் பயிர் கடன்களை ரத்து செய்துள்ளது” என்றார்.
இதையும் படிங்க: ’தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது’ : முதலமைச்சர் பழனிசாமி