திருவள்ளூர் தொகுதி திமுக எம்.எல். ஏ ராஜேந்திரன் இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரை நேரில் சந்தித்தார்.
அப்பொழுது அவர் திருவள்ளூர் தொகுதிக்கு உள்பட்ட கடம்பத்தூர், திருவாலங்காடு போன்ற ஒன்றியங்களிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருவள்ளூர் அரசு மருத்துவமனைகளில் வைரஸ் தடுப்பு சிகிச்சைக்கு தேவையான மருத்துவ கருவிகள், சுவாசக் கருவிகள், முகக் கவசம், கிருமி நாசினி, மருத்துவ உபகரணங்கள் வாங்க தனது தொகுதி மேம்பாட்டு நிதி 2019-20ல் இருந்து ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்திருப்பதாகத் தெரிவித்தார்.
இதற்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தார்.
இதையும் படிங்க... முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் நிதி வழங்க முடிவு - கே.பாலகிருஷ்ணன்!