ETV Bharat / state

பேரம் பேசிய மகிளா நீதிமன்ற வழக்கறிஞர் - பணிநீக்கம் செய்து அரசு உத்தரவு! - குற்றவாளிகளிடம் அரசு வழக்கறிஞர் பேரம்

திருவள்ளூர்: மாவட்ட மகிளா நீதிமன்ற அரசு வழக்கறிஞர் தனலட்சுமி மீது குற்றவாளிகளிடம் பேரம் பேசி, பணம் வாங்கியதாக எழுந்த பல்வேறு புகாரின்பேரில், பணிநீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு பெண் வழக்கறிஞர் தனலட்சுமி
author img

By

Published : Oct 22, 2019, 8:16 AM IST

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் துரைராஜ் (58), அவரது மனைவி கண்ணகி(52) ஆகியோரின் இளைய மகள் சத்யா(22) திருமணமான 8 மாதங்களிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து சத்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, துரை ராஜுன் சொந்த ஊரில் நல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக துரைராஜ் தம்பதியினர், சென்னை எஸ்.ஆர்.எம்.சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மதுரவாயல் சரக உதவி ஆணையாளர் விசாரித்து வந்த வழக்கு, பூவிருந்தவல்லி நீதிமன்றத்திற்கு வந்தது. பின்னர் அங்கிருந்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு அரசு வழக்கறிஞராக இருந்த தனலட்சுமி இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எதிரி மணிகண்டனுக்குத் தண்டனை பெற்றுத் தரப் பணம் கேட்டு, பலமுறை துரைராஜ் மற்றும் கண்ணகி தம்பதியினரைத் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே தங்களிடம் வழக்கை நடத்த அடிக்கடி பணம் கேட்டு, சுமார் 60 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாக அரசு வழக்கறிஞர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் துரைராஜ் தம்பதியினர் புகார் கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து இவ்வழக்கு குறித்து தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டது.

ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வழக்கறிஞர்களும், மகிளா நீதிமன்ற அரசு வழக்கறிஞர் தனலட்சுமி செயல்பாட்டைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் மனு அளித்ததுடன், நீதிமன்றத்தையும் புறக்கணித்து சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இத்தருணத்தில் திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்ற அரசு வழக்கறிஞர் தனலட்சுமி மீது குற்றவாளிகளிடம் பேரம், வழக்காடிகளிடம் பணம் வாங்கியதாக எழுந்த பல்வேறு புகாரின் பேரில் பணிநீக்கம் செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பேரம் பேசிய அரசு வழக்கறிஞர்! பணிநீக்கம் செய்து அரசு உத்தரவு

மேலும் புதிதாகத் திருவள்ளூர் மாவட்ட மகிளா சிறப்பு நீதிமன்றத்திற்கு, அரசு வழக்கறிஞர் நியமிக்கப்படும் வரை பணி காலியாக இருக்கும் என்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையும் படிங்க:

சகோதரியின் 70 லட்சத்தை சுருட்டிய தங்கை..! - காவல் ஆணையரிடம் புகார்

Intro:திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்ற அரசு பெண் வழக்கறிஞர் தனலட்சுமி மீது குற்றவாளி களிடம் பேரம்
வழக்காடி களிடம் பணம் வாங்கியதாக
எழுந்த பல்வேறு புகாரின்பேரில் பணிநீக்கம் செய்து அரசு உத்தரவு.

Body:திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்ற அரசு பெண் வழக்கறிஞர் தனலட்சுமி மீது குற்றவாளி களிடம் பேரம்

வழக்காடி களிடம் பணம் வாங்கியதாக
எழுந்த பல்வேறு புகாரின்பேரில் பணிநீக்கம் செய்து அரசு உத்தரவு.

திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்ற பெண் அரசு வழக்கறிஞர் மீது பணம் வாங்கி கொண்டு குற்றம் சாட்டப்பட்ட எதிரிகளுக்கு சாதகமாக நடந்து கொண்டு ஏமாற்றியதாக திருச்சியை சேர்ந்த மூத்த தம்பதியர்
தங்களது
மகளின்
சாவுக்கு காரணமாக திகழ்ந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்களிடம் 60 ஆயிரத்திற்கும் மேல் பணத்தை பறித்த அரசு பெண் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுத்து நியாயம் வழங்க வேண்டுமென கண்ணீருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் s.p. அரவிந்தனிடம் புகார் அளித்துள்ளனர்.

சென்னை மாதவரம் பால் பண்ணை காவல் நிலைய எல்லையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பக்கத்து வீட்டு பெண்ணை கோபிநாத் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு சாதகமாக பணம் வாங்கிக்கொள் அல்லது திருமணம் செய்து கொள் என்று வழக்கை திசை திருப்பும் நோக்கத்தில் அரசு தரப்பு பெண் வழக்கறிஞர் தனலட்சுமி குற்றம் சாட்டப்பட்ட நபரை தனது அறைக்குள்ளேயே எதிரே வைத்துக்கொண்டே பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டுவதாகவும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் அதேபோன்று
கடந்த 2016ஆம் ஆண்டு நிகழ்ந்த பாலியல் வழக்கு ஒன்றில் பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலைய வழக்கில் தொடர்புடைய சீனிவாசன் என்ற நபருக்கு சாதகமாக பாதிக்கப்பட்ட பெண்ணையே மிரட்டினார் என்றும் திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் அரசு பெண் வழக்கறிஞர் தனலட்சுமி மீது திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் வசம் பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பினர் புகார் அளித்து இருந்தனர்

இது குறித்து செய்தியாளர்கள் தரப்பில் சம்பந்தபட்ட பெண் அரசு வழக்கறிஞரை கேட்டபோது தம் மீது வேண்டும் என்றே அவதூறு பரப்புவதாக கூறினார்.

இந்த நிலையில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன்அவர்களிடம்
திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் உள்ள அரசு பெண் வழக்கறிஞராக உள்ள தனலட்சுமி மீது மேலும் ஒரு பரபரப்பு புகார் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் குணசீல ம் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் துரைராஜ் 58 அவரது மனைவி கண்ணகி 52 ஆகியோர் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை போரூர் பகுதியில் வாடகை வீடு ஒன்றில் தனது மருமகன் முசிறியை சேர்ந்த மணிகண்டன் உடன் வசித்து வந்த போது மர்மமான முறையில் இறந்து போன தனது இளைய மகள் சத்யா22

16-09-2010 அன்று தற்கொலை செய்து கொண்டதாக மணிகண்டன் வீட்டார் தெரிவிக்கவே
போரூர் எஸ் ஆர் எம் சி காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து திருமணமாகி 8 மாதங்களே ஆன நிலையில் இருந்ததால் பொன்னேரி கோட்டாட்சியர் நேரில் வந்து விசாரணை செய்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சடலத்தை உடலுறவிற்கு அனுப்பினார் மகளின் இறப்பு செய்தி கேட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு
ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் துரைராஜ் அவரது மனைவி கண்ணகி திருச்சியில் இருந்து வந்து மகள் சடலத்தை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து உடற்கூறு ஆய்வு முடித்து சொந்த ஊருக்கு கொண்டு சென்று இறுதி மரியாதை செய்தனர் இந்த நிலையில் மகளின் சாவில் மர்மம் இருப்பதாக சென்னை எஸ் ஆர் எம் சி காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் மதுரவாயல் சரக உதவி ஆணையாளர் விசாரித்த வழக்கு பூவிருந்தவல்லி நீதிமன்றத்திற்கு வந்தது பின்னர் அங்கிருந்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு அரசு வழக்கறிஞராக இருந்த தனலட்சுமி இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எதிரி மணிகண்டனுக்கு தண்டனை பெற்று தர பணம் கேட்டு பலமுறை ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் துரைராஜ் மற்றும் கண்ணகி தம்பதியினரிடம் திருத்தணிக்கு வரவழைக்கும் திருவள்ளுவர் பணத்தை பெற்றுள்ளார் குடும்பச் சூழலில் வீட்டில் இருந்த நகைகளை வைத்து கூட இவர்கள் அரசு பெண் வழக்கறிஞர் தனலட்சுமிக்கு பணம் கொடுத்துள்ளனர் பணத்தை வங்கியில் செலுத்தியதற்கான ஆதாரங்களை வைத்து இருந்த அவர்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் எதிர் தரப்பில் வழக்கு சாதகமானது இதனால் மனமுடைந்த தம்பதியினர் தற்போது மேல்முறையீடு செய்துள்ளனர் இதனிடையே தங்களிடம் வழக்கை நடத்த அடிக்கடி பணம் கேட்டு சுமார் 60 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பணத்தை வசூலிக்க அரசு பெண் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் தங்களது பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் வசம் புகார் ஒன்றை வழங்கினர். இந்த வழக்கை விசாரித்த எஸ் பி அரவிந்தன் மூத்த தம்பதியருக்கு இருவரையும் காவல் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் அவர்களை விசாரிக்க உத்தரவிட்டது தம்பதியரின் முழு புகாரையும் பதிவு செய்து ஏற்கனவே பாதிக்கப்பட்ட இருவர் அளித்த புகார்கள் உடன் சேர்த்து பணத்தை ஏமாற்றிய இந்த புகாருடன் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் விசாரணையை மேற்கொண்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அம்பத்தூர் நீதிமன்றம் என மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வழக்கறிஞர்களும் மகிலா நீதிமன்ற பெண் அரசு வழக்கறிஞர் தனலட்சுமி செயல்பாட்டை கண்டித்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் மனு அளித்ததுடன் நீதிமன்றத்தையும் புறக்கணித்து சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களையும் நடத்தி இருந்த நிலையில் தற்போது எழுந்துள்ள புகார்கள் மேலும் பரபரப்பைக் கூட்டியது.
இந்த நிலையில்

திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்ற அரசு பெண் வழக்கறிஞர் தனலட்சுமி மீது குற்றவாளி களிடம் பேரம்

வழக்காடி களிடம் பணம் வாங்கியதாக
எழுந்த பல்வேறு புகாரின்பேரில் பணிநீக்கம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது மேலும் புதிதாக திருவள்ளூர் மாவட்ட மகிலா சிறப்பு நீதிமன்றத்திற்கு அரசு வழக்கறிஞர் நியமிக்கப்படும் வரை பணி காலியாக இருக்கும் என்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பேட்டி திருமதி கண்ணகி ...குணசீலம்

திரு. துரைராஜ் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் குணசீலம்

வழக்கறிஞர் பார் அசோசியேஷன் தலைவர் நித்யானந்தம்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.