ETV Bharat / state

பழவேற்காட்டில் பேரிடர் ஒத்திகை பயிற்சி! - பழவேற்காட்டில்

திருவள்ளூர்: பழவேற்காட்டில் 13 கடற்கரை கிராமங்களில் உள்ள மக்களுக்கு பொன்னேரி கோட்டாட்சியர் தலைமையில் பேரிடர் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

பழவேற்காட்டில் பேரிடர் ஒத்திகை பயிற்சி!
author img

By

Published : Aug 5, 2019, 9:21 AM IST

தமிழ்நாட்டில் உள்ள கடலோர மாவட்டங்களில் பேரிடர் ஒத்திகை பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் 13 கடற்கரை கிராமங்களில் உள்ள மக்களுக்கு பேரிடர் ஒத்திகை பயிற்சி, பொன்னேரி கோட்டாட்சியர் நந்தகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், ஒலிப் பெருக்கி மூலம் அங்குள்ள கிராமங்களில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து, பேரிடர் மீட்பு குழுவினர் அப்பகுதி மக்களை மீட்டு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் ஏற்றி ஆண்டார்மடம் அருகே உள்ள பேரிடர் பாதுகாப்பு மையத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்கும் ஒத்திகை, கால்நடைகள் மீட்பு ஒத்திகை, மாடி வீடுகள் மேலிருந்த மக்களை மீட்கும் ஒத்திகை மற்றும் பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து பணியாளர்களை காப்பாற்றும் ஒத்திகை போன்றவைகள் நடைபெற்றன.

பழவேற்காட்டில் பேரிடர் ஒத்திகை பயிற்சி!

இந்நிகழ்ச்சி நேற்று காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. இதில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர், அரசு அலுவலர்கள், தீயணைப்புத்துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் 283 பேர் கலந்துகொண்டனர்.

Intro:திருவள்ளூர் பழவேற்காட்டில் பேரிடர் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. கிராம மக்கள் 283 பேர் சமுதாயக் கூடத்தில் தங்க வைப்பு.

Body:திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் 13 கடற்கரை கிராமங்கள் இருக்கின்றன. இங்கு பேரிடர் ஏற்படக்கூடிய அபாயம் இருக்கின்ற காரணத்தினால் பேரிடர் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. பொன்னேரி வருவாய் கோட்டம் சார்பில் பொன்னேரி கோட்டாட்சியர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகை பயிற்சியில் வருவாய்த்துறை,காவல்துறை,தீயணைப்புத் துறை,சுகாதாரத் துறை,கல்வித் துறை,நெடுஞ்சாலைத் துறை,ஊரக வளர்ச்சித் துறை,உணவு பாதுகாப்பு துறை,மின்சாரத் துறை,கால்நடைத்துறை,மீன்வளத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் பணியாளர்களும் கலந்து கொண்டனர். எப் பேரிடர் எச்சரிக்கை ஒலிப்பான் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. இதன் பின்னர் பொதுமக்கள் கிராமத்திலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் ஏறி ஆண்டார்மடம் அருகே உள்ள பேரிடர் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.பின்னர் தண்ணீரில் தத்தளித்த அவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டெடுத்தனர் அதேபோன்று கால்நடைகளையும் காப்பாற்றினர். மாடி வீடுகள் மீது இருந்த பொது மக்களையும் பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து பணியாளர்களை காப்பாற்றும் ஒத்திகையில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத் துறையினர் சாலையில் கிடந்த மரச் செடிகளை இயந்திரங்கள் மூலம் வெட்டி அப்புறப்படுத்தினர். பின்பு பாதிக்கப்பட்டவர்களை சுகாதாரத் துறையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வண்டியில் மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டனர். இவ்வாறாக மதியம் முதல் சாயங்காலம் வரை நடைபெற்ற ஒத்திகையில் மாவட்ட வருவாய் அலுவலர்( பொறுப்பு) ராஜகோபாலன், பொன்னேரி வட்டாட்சியர் வின்சென்ட், கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் செந்தில்நாதன், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கௌரி,வேதநாயகம், தீயணைப்புத் துறை உதவி மாவட்ட அலுவலர் பாஸ்கர் மற்றும் பல்வேறு சமூக சேவை நிறுவனத்தை சார்ந்தவர்களும் தன்னார்வலர்களும் கிராம நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆண்டார்மடம் பேரிடர் பாதுகாப்பு மையத்தில் 283 கிராம மக்கள் தங்கவைக்கப்பட்டு மதியம் முதல் சாயங்காலம் வரை உணவு வழங்கப் பட்டன.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.