கடந்த வாரம் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீருடன் சேர்ந்து கழிவுநீரும் தேங்கியுள்ளதால், தொற்று நோய்கள் பரவிவருகின்றன. இதனால் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
35க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவருகின்றனர். மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில், 12 பேருக்கு டெங்கு காய்ச்சல் என உறுதிப்படுத்தப்பட்டு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகள் அதிகரித்து வருவதால் திருத்தணி நகராட்சி சார்பில் கூடுதலாக 50 கொசு ஒழிப்பு பணியாளர்களும் துப்புரவுப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டு, தூய்மைப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: '2 பாம்புகள், 16 மரப்பல்லிகள், உடும்புகள்' - பயணி கூடையைத் திறந்து அதிர்ந்த சுங்கத்துறையினர்!