தூத்துக்குடி சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு சந்தேகத்திற்கிடமான முறையில் தந்தை, மகன் உயிரிழந்தனர். இவர்களின் மரணத்திற்கு காவல்துறையினர்தான் காரணம் எனக் கூறி மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று திருவள்ளூர் மாவட்டம் தாமரை பக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரின் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், ஊரடங்கின்போது காவல்துறையினர் எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளைக் கண்டித்தனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டவர்களை, அனுமதியில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் சம்பவம்: பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதிமுக ரூ.25 லட்சம் நிதியுதவி