ETV Bharat / state

புழல் மத்திய சிறையில் கரோனா சோதனை - tamil latest news

திருவள்ளூர்: புழல் மத்தியச் சிறையில் உள்ள கைதிகள், சிறைக்காவலர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

puzhal central prison
puzhal central prison
author img

By

Published : May 28, 2020, 5:45 PM IST

திருவள்ளூர் மாவட்டம், புழல் மத்திய சிறையின் தண்டனைப் பிரிவில் சுமார் 800க்கும் மேற்பட்ட கைதிகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். பிற மாவட்டங்களில் உள்ள மத்திய சிறைகளைச் சேர்ந்த தண்டனைக் கைதிகள் சிலர், புழல் சிறையில் பயிற்சி முடித்து, மீண்டும் அவர்களது சிறைக்குத் திரும்பிய போது கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை ஆகிய சிறைகளில் ஐந்து பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் புழல் சிறையில் இருந்து, வந்த அந்த 5 கைதிகளுக்குத் தொற்றுப் பரவி இருக்குமோ, அல்லது அந்த 5 கைதிகளிடமிருந்து புழல் கைதிகளுக்குத் தொற்றுப் பரவி இருக்குமோ என சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள ஐந்து கைதிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு முதற்கட்டமாக பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

தற்போது 74 கைதிகள், 19 சிறைக்காவலர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தாண்டு ஐபிஎல் நடைபெறும் - லக்ஷ்மண், கும்ப்ளே நம்பிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.