திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் கரோனா தொற்று காரணமாக 13 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். அவர்களது குடும்பத்தில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.
அந்தக் குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் வருவாய்த் துறையினர் மூலம் வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி ஆணையர் நடராஜன், மீஞ்சூர் ஒன்றியக் குழுத் தலைவர் ரவி ஆகியோர் நேரடியாக அந்தப் பகுதிகளுக்கு சென்று கரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்.
மேலும் பழவேற்காடு பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கினர். அப்போது, பொதுமக்களுக்கு மளிகைப் பொருள்கள், காய்கறி ஆகியவை வீடுகளுக்கே சென்று விநியோகம்செய்வது குறித்து ஊராட்சி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க:கரோனா பயம்: கூழ் குடிக்க அஞ்சும் மக்கள்