உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று, தமிழ்நாட்டிலும் தனது கோரத்தாண்டவத்தை வெளிப்படுத்தி வருகிறது.
அதன் படி இன்று (செப்.5) ஒரோ நாளில் திருவள்ளூர் மாவட்டத்தில் 260 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அதேசமயம் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரமாக இருந்துவருகிறது. மீதமுள்ள 1,313 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் காரணமாக 427 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:அண்ணா, எம்ஜிஆர் தடம்பதித்த வராக நதி: சூளுரைத்த ஓபிஆர்!