ETV Bharat / state

"கரோனா வைரஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அறை"- 24மணி நேர சேவை - திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி

திருவள்ளூர்: பூவிருந்தவல்லியில் ஊரடங்கு உத்தரவால் நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுடன் தொடர்பில் இருக்கும் வகையில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அறை
கரோனா வைரஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அறை
author img

By

Published : Apr 12, 2020, 9:48 AM IST

இந்தியா முழுவதும் கரோனா நோய்த் தொற்றுக் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாடு முடங்கியுள்ளது. இந்த நிலையில் பொதுமக்களின் நலன் கருதி அவர்களுடன் 24 மணி நேரமும் தொடர்பில் இருக்கும் வகையில் பூவிருந்தவல்லி நகராட்சியில் 24 மணிநேரமும் செயல்படும் "கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் கட்டுப்பாட்டு அறை" தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அறை

இந்நிலையில் இதற்கான எண்களை பூவிருந்தவல்லி நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, 044-26272710, 9677142672 ஆகிய இரண்டு எண்ணிற்குத் தொடர்பு கொண்டு கரோனா குறித்த சந்தேகங்கள், தங்கள் பகுதியில் சந்தேகிக்கப்படும் வகையில் அறிகுறியுடன் யாரேனும் இருப்பின் அவர்கள் குறித்த புகார் தெரிவிக்கலாம்.

மேலும் மருத்துவ உதவிகள், உணவு, உணவுப் பொருட்கள் தேவை, சுகாதார பணிகள் உள்ளிட்ட பயன்பாட்டிற்கு பூவிருந்தவல்லி பகுதி பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என அந்த நகராட்சி ஆணையர் வசந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் மூலம் பூவிருந்தவல்லி நகராட்சியில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் மட்டுமின்றி மருத்துவ தேவைகளுக்கும் அணுகலாம் என்ற முயற்சியால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் இப்பகுதி மக்களுக்கு இந்தத் திட்டம் சற்று பயனளிப்பதாக இருப்பதோடு ஆறுதல் அளிப்பதாகவும் அமைந்துள்ளது .

இதையும் படிங்க: சட்டம்லாம் மக்களுக்குத்தான் எங்களுக்கு இல்லை: பாஜக எம்.எல்.ஏவின் கூத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.