திருவள்ளூர்: காக்களூர் - புட்லூர் சாலையில் வசித்து வருபவர் கட்டட தொழிலாளி முருகன் (56). இவர், தனது வீட்டின் அருகே தனியாக சென்று கொண்டிருந்த 8ஆம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார்.
இது குறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்தார். உடனே சிறுமியின் தாய் முருகனிடம் கேட்டபோது, அதற்கு அவர் தரக்குறைவாகவும், தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் தாய் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முருகன் மீது புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பட்டாபிராம் பகுதியில் பதுங்கியிருந்த முருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர் முருகனை புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு மூன்றாண்டு சிறை!