ETV Bharat / state

மாட்டுப் பொங்கல் விழா: மஹாராஷ்டிரா, குஜராத்தில் தயாரிக்கப்பட்ட கயிறுகள் விற்பனை - tamil new year

திருவள்ளூர்: மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மாவட்டத்தின் முக்கிய வீதிகளில் புதுவகையான கயிறுகள் விற்கப்படுகின்றன. இதனை அந்தப் பகுதியிலுள்ள விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். மாட்டுப் பொங்கலை முன்னிட்டு திருவள்ளூரில் விற்கப்படும் அழகழகான கயிறுகளை பற்றிய செய்தி தொகுப்பு...

color ropes for bulls
color ropes for bulls
author img

By

Published : Jan 15, 2020, 9:42 PM IST

மாட்டுப் பொங்கல் என்றாலே மாடுகளை வண்ணமயமாக அலங்கரித்து அழகழகான கயிறுகளை கட்டி, மணி ஓசையுடன் நடக்க வைத்து அழகு பார்க்கக் கூடிய நாளாகும். மாடுகளை வைத்து விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு அது உயிர் துடிப்பாக இருக்கிறது. அப்பேர்ப்பட்ட மாடுகளுக்கு விதவிதமான அலங்காரங்கள் செய்யப்படும் ஒரே நாள் மாட்டுப் பொங்கல் திருநாள்தான். விவசாயிகளின் உயிருக்கு மேலாக நேசிக்கப்படும் மாடுகளுக்கு சிறந்த முறையில் அலங்காரம் செய்ய புதிய கயிறுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியிலிருந்து வந்த வியாபாரிகள், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய பகுதிகளிலிருந்து தயார் செய்யப்பட்ட விதவிதமான கயிறு வகைகளை கலர்கலரான மணிகளைக் கொண்டு அலங்கரிக்க கூடிய தோரணங்களை தொங்கவிட்டு விற்பனை செய்து வருகின்றனர். திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே இந்தக் கடைகள் உள்ளன.

மஹாராஷ்டிரா, குஜராத்தில் தயாரிக்கப்பட்ட கயிறுகள் விற்பனை

மாடுகளுக்கு திருஷ்டி கயிறு, மூக்கணாங்கயிறு, கன்றுகளுக்கு அழகழகாக கலர் கயிறுகள், கழுத்து வலிக்காமல் இருக்க ஏற்றவாறு செய்யப்பட்ட கயிறுகள் என பல வகையான கயிறுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

பசு மாடுகளுக்கும் ஆடுகளுக்கு தனிக்கயிறுகள் விற்கப்படுகின்றன. இவ்வகையான கயிறுகளை வாங்க திருவள்ளூர் மாவட்டத்தை சுற்றியுள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி கனகம்மாசத்திரம், கடம்பத்தூர், தக்கோலம் ஆகிய பகுதிகளில் இருக்கக்கூடிய விவசாயிகள் வந்து செல்கின்றனர்.

Intro:திருவள்ளூர் மாவட்டம்

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட முக்கிய வீதிகளில் புதுவகையான கயிறுகள் விற்கப்படுகிறது மாடுகளுக்கு புதுவகையான கயிறுகளை வாங்க திருவள்ளூர் மாவட்டத்தை சுற்றியுள்ள கும்மிடிப்பூண்டி பொன்னேரி திருத்தணி கனகம்மாசத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் புதுவகையான கயிறுகளை வாங்கி செல்கின்றனர்.

Body:மாட்டுப் பொங்கலை முன்னிட்டு திருவள்ளூரில் விற்கப்படும் அழகழகான கயிறுகளை பற்றிய செய்தி தொகுப்பு

மாட்டுப் பொங்கல் என்றாலே மாடுகளுக்கு வண்ணமயம் விட்டு அழகழகான கயிறுகளை கட்டி மணி ஓசையுடன் அது நடக்க வைத்து அழகு பார்க்க கூடிய நாள்தான் மாட்டுப்பொங்கல் மாடுகளை வைத்து விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு உயிர் துடிப்பாக இருப்பதே மாடுகள்தான் அப்பேர்ப்பட்ட வகைவகையான மாடுகளுக்கு விதவிதமான அலங்காரங்கள் செய்யப்படும் ஒரே நாள் மாட்டுப்பொங்கல் அன்று தான். விவசாயிகளின் உயிருக்கு மேலாக நேசிக்கப்படும் மாடுகளுக்கு சிறந்த முறையில் அலங்காரம் செய்ய திருவள்ளூர் மாவட்டம் தலைநகரான பேருந்து நிலையம் அருகே சாலை ஓரங்களில் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியிலிருந்து வந்த வியாபாரிகள் விதவிதமான மகாராஷ்டிரா குஜராத் ஆகிய பகுதிகளிலிருந்து தயார் செய்யப்பட்ட கயிறு வகைகளும் கலர்கலரான மணிகளைக் கொண்டு அலங்கரிக்க கூடிய தோரணங்களை தொங்கவிட்டு அழகு பார்க்க கூடிய அழகு சாதனங்களை விற்க மும்முரமாய் அவர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றன.

மாடுகளுக்கு டிஸ்ட்ரிகயிறு மூக்கணாங்கயிறு கண்ணுகுட்டி களுக்கு அழகழகாக கலர் கயிறுகள் கழுத்து வலிக்காமல் இருக்க பாஞ்சி வசதியுடன் கூடிய வண்ண கயிறுகள் நீளமான கயிறுகள் குறுகிய மணி ஓசை உடைய கயிறுகள் என்று பல வகையான கயிறுகளை விவசாயிகள் வாங்கி வாங்கி செல்கின்றனர்.

பசு மாடுகளுக்கு என்று தணிக்கையும் எழுதும் ஆடுகளுக்கு தணிக்கையும் விற்கப்படுகின்றன இவ்வகையான கயிறுகளை வாங்க திருவள்ளூர் மாவட்டத்தை சுற்றியுள்ள கும்மிடிப்பூண்டி பொன்னேரி திருத்தணி கனகம்மாசத்திரம் கடம்பத்தூர் தக்கோலம் ஆகிய பகுதிகளில் இருக்கக்கூடிய விவசாயிகள் வந்து வாங்கி செல்கின்றனர்.

பேட்டி கயிறு வியாபாரி குணசேகர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.