திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மஞ்சங்கரணை கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கத்தின் மகன் லோகேஷ். இவர் பொன்னேரி உலகநாதன் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு பயின்றுவந்துள்ளார். இவர் நேற்று (நவ. 16) தனது நண்பர்களுடன் பழவேற்காடு கடலுக்கு குளிக்கச் சென்றனர்.
அப்போது கடலில் நண்பர்கள் அனைவரும் குளித்துக் கொண்டிருந்தபோது, லோகேஷ் மட்டும் காணாமல்போயுள்ளார். உடனே இவருடன் சென்ற நண்பர்கள், லோகேஷின் உறவினர்களுக்குத் தகவல் கொடுத்தனர். அத்தகவலின் அடிப்படையில் இளைஞரின் உறவினர், திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர், மீனவ கிராம மக்கள் காணாமல்போன லோகேஷை கடல் பகுதி, கடலோரப் பகுதிகளில் தேடிவருகின்றனர்.