ETV Bharat / state

திருமழிசையில் ஆய்வு மேற்கொண்ட அலுவலர்கள்! - temporary market inspection

திருவள்ளூர்: திருமழிசையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி வணிக வளாகத்தை வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

collector inspection
collector inspection
author img

By

Published : May 14, 2020, 10:21 PM IST

சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் கரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். கோயம்பேடு வணிக வளாகத்திற்கு சென்று வந்த வியாபாரிகள், தொழிலாளர்கள் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் பரவி வருவதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கோயம்பேடு சந்தை தற்காலிகமாக, திருவள்ளூர் மாவட்டம் - திருமழிசையில் துணைக்கோள் நகரம் அமைய உள்ள இடத்திற்கு மாற்றப்படும் என்று மாநகராட்சி அறிவித்திருந்தது.

இதனடிப்படையில் கடந்த 11ஆம் தேதி முதல் அங்கு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் நாகராஜ், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உள்ளிட்ட குழுவினர் வணிக வளாகங்களை ஆய்வு செய்தனர்.

திருமழிசையில் ஆய்வு மேற்கொண்ட அலுவலர்கள்!

அப்போது வணிக வளாகத்திற்கு வரும் நபர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்றும், முகக்கவசம் இல்லாமல் வருபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

மேலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களை சந்தையின் உள்ளே அனுமதிக்கக் கூடாது எனவும், பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள்.

இதையும் பார்க்க: 'மத்திய அரசின் பொருளாதாரத் திட்டம் மிகப்பெரிய பூஜ்ஜியம்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.