திருவள்ளூர் மாவட்டம் திருவாலாங்காடு அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த அசோகனுக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. இதற்குமேல் பெண் குழந்தை வேண்டாம் என நினைத்த அவர்கள், அக்குழந்தைக்கு 'வேண்டாம்' என பெயர் வைத்தனர்.
தற்போது சென்னை குன்றத்துார் அடுத்த நல்லுார் சிஐடி கல்லுாரியில் எல்கட்ரானிக் கம்யூனிகேஷன் பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் ‘வேண்டாம்’, கேம்பஸ் இன்டர்வியூவில் ஜப்பான் நாட்டில் உள்ள ஹூமன் டிசோசா என்ற தனியார் நிறுவனத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது சம்பளம் ஆண்டுக்கு 22 லட்சம் ரூபாய் ஆகும்.
பெண் குழந்தையை வேண்டாம் என நினைத்த தந்தையின் எண்ணத்தை அவர் கல்வியின் மூலம் மாற்றியிருப்பார். எனவே அவரை கௌரவிக்கும் விதமாக பெண் குழந்தையை காப்போம்; பெண் குழந்தைக்கு கற்பிப்போம் திட்டத்தின் சிறப்பு துாதவராக நியமத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வாழ்த்துகளை தெரிவித்தார்.