பூவிருந்தவல்லி ஒன்றியத்திற்குட்பட்ட சென்னீர் குப்பம் ஊராட்சியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அதிலிருந்து சுற்றுவட்டார குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நீர் தேக்கத் தொட்டியில் உள்ள குழாய்கள் அனைத்தும் பழுதடைந்துவிட்டதால் அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
குடிநீர் தொட்டியில் அதிக அளவு தண்ணீர் இருப்பது தெரிந்தும், அதனை பொதுமக்களுக்கு முறையாக விநியோகம் செய்யாமல், தண்ணீர் இருக்கும்போதே குழாய்களை சரிசெய்ததால் குடிநீர் வீணாகியது. இதனை பார்த்த பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும் என ஊராட்சி நிர்வாகம் கூறிவிட்டு அவர்களே அதை கடைபிடிக்கவில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ’குடிநீர் முறையாக வழங்க வேண்டும்’ - காலி குடங்களுடன் மனு அளித்த கிராம மக்கள்!