திருவள்ளூர்: திருநின்றவூர் ரயில் நிலையத்தில் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி மாநிலக் கல்லூரி மாணவர் ஒருவரை பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் ஏழு பேர் அழைத்துச் சென்று அவரை ராக்கிங்செய்து கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாநிலக் கல்லூரி மாணவர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போட்ட உயிர் பிச்சையால் தன்னால் வாழ முடியாது என்று சக மாணவர்கள், பெற்றோருக்கு உருக்கமாகப் பேசி ஆடியோ பதிவிட்டு அன்று மாலையே திருநின்றவூர் ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து மாநிலக் கல்லூரி மாணவரை தற்கொலைக்குத் தூண்டியதாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஏழு பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர். இதில் கடந்த 31ஆம் தேதி ஒரு மாணவரை ரயில்வே காவல் துறையினர் கைதுசெய்து திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.
தற்போது மேலும் ஒரு பச்சையப்பன் கல்லூரி மாணவரை கைதுசெய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஐந்து மாணவர்களை திருவள்ளூர் ரயில்வே காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: தனக்கு பரோல் வேண்டி நளினியின் கணவர் ஸ்டாலினிடம் கோரிக்கை