ETV Bharat / state

450 பேர் மீது வழக்கு : ஊரடங்கு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை!

திருவள்ளூர் : ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 450 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 400 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Case against 450 persons for violating curfew
450 பேர் மீது வழக்கு : ஊரடங்கு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை!
author img

By

Published : Mar 28, 2020, 11:19 PM IST

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிவேகமாகப் பரவிவருகிறது. உலகளவில் இதுவரை 6 லட்சத்து 31 ஆயிரத்து 766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 ஆயிரத்து 990 பேர் உயிரிழந்தனர். குறிப்பாக தமிழ்நாட்டில் 40 பேர் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை உறுதி செய்துள்ளது.

வேகமாக பரவி வரும் இதைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி வருகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊடரங்கு அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், வைரஸ் தொற்றின் சமூகப் பரவலை தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடவும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் அனைவரும் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியே வந்து 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இருப்பினும், திருவள்ளூர் மாவட்டத்தில் மாநில அரசு பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவை மீறி வெளியே பயணப்படுவோரின் எண்ணிக்கை அதிகளவில் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இது குறித்து தொடர் புகார்கள் வந்ததன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இன்று திடீர் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இதனை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “மத்திய - மாநில அரசுகளின் உத்தரவிற்கிணங்க, 144 தடை சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் அந்த உத்திரவினை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இதுவரை இத்தடை உத்தரவினை மீறியதாக பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என 450க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Case against 450 persons for violating curfew
450 பேர் மீது வழக்கு : ஊரடங்கு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை!

50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பாக சமூகவலைத்தளத்தில் வதந்தி பரப்பிய 2 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும். தேவையில்லாமல் வெளியே வருபவர்கள், ஊர் சுற்றுபவர்கள் மீது 144 தடைச் சட்டத்தின் கீழ் சட்ட ரீதியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”, என தெரிவித்தார்.

முன்னதாக, இருசக்கர வாகனத்தில் வந்து போக்குவரத்து காவல் துறையினரின் சோதனையில் மாட்டிக்கொண்டவர்கள் அனைவரையும், ‘வீட்டைவிட்டு வெளியே வரமாட்டேன், மாவட்ட நிர்வாகம் எடுக்கும் முடிவுகளை கவனித்து நடப்பேன். மீறினால் அரசு எடுக்கும் கடுமையான நடவடிக்கைக்கு கட்டுப்படுவேன்’ உறுதி மொழி வாசிக்க வைத்து, எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க : 'கரோனாவுக்கு பயந்தா ஆகுமா?' - ஊரடங்கிலும் மணல் கடத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.