ETV Bharat / state

தூக்கி எறிந்த தொழிற்சாலை: கண்ணீர் மல்க நிற்கும் 200 குடும்பங்கள்! - திருவள்ளூர்

திருவள்ளூர்: உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக  நிரந்தரப் பணியாளர்களாக இருந்தவர்களை பணியிலிருந்து நீக்கியதால், அவர்களின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரை சந்தித்து வேலையை உறுதி செய்ய வழிவகை செய்யுமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

தூக்கி எறிந்த தொழிற்சாலை: கண்ணீரோடு நிற்கும் 200 குடும்பங்கள்!
author img

By

Published : May 9, 2019, 7:34 AM IST

திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூரில் ஹெச்.எம்.எஃப்.சி.எல். எனப்படும் கார் உதிரி பாகம் தயார் செய்யும் தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது. கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக அலுவலகப் பணியாளர்கள், தொழிலாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் நிரந்தரப் பணியாளர்களாக வேலை செய்துவந்துள்ளனர்.

இந்நிலையில், பெருமளவு பங்குகளை ஹெச்.எம்.எஃப்.சி.எல். நிறுவனம் ஃபிரான்ஸ் நாட்டு நிறுவனத்துக்கு விற்றுவிட்டதால், அங்கு பணிபுரியும் நிரந்தரப் பணியாளர்களாக உள்ள அலுவலக ஊழியர்களை வெளியேற முதல் கட்டமாக உத்தரவிட்டுள்ளது.

இதனால் ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் தொடர்ந்து 6 நாட்களாக ஈடுபட்டுவருகின்றனர். தொழிலாளர்கள் வீட்டிற்கு வராமல் தொழிற்சாலையிலேயே இருப்பதால், அவர்களது குடும்பத்தினர் நேற்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரை நேரில் சந்தித்து மீண்டும் பணியில் அமர்த்துமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

கண்ணீரோடு நிற்கும் குடும்பங்கள்

இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தங்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Intro:திருவள்ளூர் அருகே கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக  நிரந்தரப் பணியாளர்களாக இருந்த 200-க்கும் மேற்பட்டோரை பணியிலிருந்து நீக்கியதால் உள்ளிருப்பு போராட்டம்: ஊழியர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வேலையை உறுதி செய்ய கண்ணீர் மல்க கோரிக்கை:  

Body:
திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் அருகே கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக  நிரந்தரப் பணியாளர்களாக இருந்த 200-க்கும் மேற்பட்டோரை பணியிலிருந்து நீக்கியதால் உள்ளிருப்பு போராட்டம்: ஊழியர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வேலையை உறுதி செய்ய கண்ணீர் மல்க கோரிக்கை:  

திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூரில் எச்.எம்.எப்.சி.எல். எனப்படும் கார்  உதிரி பாகம் தயார் செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.  கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் நிரந்தரப் பணியாளர்களாக வேலை செய்து வந்துள்ளனர்.  இந்நிலையில்  பெருமளவு பங்குகளை பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திடம் விற்று விட்டதால்  நிரந்தர பணியாளர்களாக உள்ள அலுவலக ஊழியர்களை முதல் கட்டமாக  வெளியேற உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட அலுவலக ஊழியர்கள்  கடந்த 2-ந் தேதி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்.  அதனைத் தொடர்ந்து ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் தொடர்ந்து 6 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். வீட்டிற்கு வராமல் தொழிற்சாலையிலேயே இருப்பதால், அவர்களது குடும்பத்தார் இன்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். தொழிற்சாலையின் 76 சதவீத பங்குகளை பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திற்கு அண்மையில் விற்பனை செய்த போதிலும், மீதமுள்ள 24 சதவீத பங்குகளை இந்த எச்.எம்.எப்.சி.எல்.  நிறுவனம் வைத்துள்ளது.. இருப்பினும்  பணி மாற்றம்  செய்து தருவதாக உறுதி அளித்திருந்தனர். இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துக்கு பெருமளவு பங்குகளை விற்பனை செய்ததால் நிரந்தரப் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரை பணியில் இருந்து விலக்க முடிவு செய்து அவர்களை பணி விலகுமாறு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாகவும்,  இதனால் 4 ஆண்டுகள் முதல் 22 ஆண்டுகள் வரை பணிபுரிந்த எங்கள் குடும்பத்தின் நிலை கேள்விக்குறியாகிப் போனதாகவும், மீண்டும் அதே நிறுவனத்தில் பணிபுரிய வழி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். அலுவலகப் பணியாளர்களாக உள்ளவர்களை தற்காலிகமாக நீக்கிய  கம்பெனி நிர்வாகம், தொழிலா்ளர்களையும் நீக்க முடிவு செய்திருப்பதால் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு எங்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.  

பேட்டி : வாணி

பாதிக்கப்பட்ட ஊழியரின் மனைவி  

etv செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்பாபு

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.