ETV Bharat / state

'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' திட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் சேவை மீண்டும் தொடக்கம்! - Bus service was restarted in a village

பொன்னேரி அருகே 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' திட்டத்தின்கீழ் உள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து 10 ஆண்டுகளாக கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து சேவையை மீண்டும் பால் வளத்துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து சேவை தொடக்கம்

author img

By

Published : Jun 23, 2022, 9:35 PM IST

திருவள்ளூர்: பொன்னேரி தொகுதிக்குட்பட்ட ஆமூர், மாலிவாக்கம், அழிஞ்சிவாக்கம், உள்ளிட்ட கிராமங்களின் வழியாக தடம் எண் டி41 அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பத்தாண்டுகளாக பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக சுற்று வட்டார கிராமங்களில் உள்ள பள்ளி மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தில்’ மனு அளித்திருந்தனர். இந்த மனு மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கையின்பேரில், கடந்த 10 ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்த பேருந்து சேவையை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், பொன்னேரி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தராஜன் மற்றும் போக்குவரத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து சேவை தொடக்கம்

இதையும் படிங்க: மீண்டும் அதிகரிக்கும் கரோனா; தயார் நிலையில் திருவள்ளூர் மாவட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.