நாட்டில் தண்ணீர் தேவையைக் கருத்தில்கொண்டு முறைகேடாக நிலத்தடி நீரை உறிஞ்சும் இடத்தை ஆராய்ந்து அங்கு இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை சீல் வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தரவின்பேரில், திருவள்ளூர் கோட்டத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளான மப்பேடு, சென்னீர்குப்பம், பூந்தமல்லி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் தொழிற்சாலைகளில் நேற்று திருவள்ளூர் கோட்டாட்சியர், வட்டாட்சியர், வருவாய்த் துறை அலுவலர்கள் ஆகியோர் நேரடியாகச் சென்று ஆய்வுசெய்து ஆழ்துளைக் கிணறுகளுக்கு சீல் வைத்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோட்டாட்சியர் வித்யா, ”நீதிமன்ற உத்தரவின்படி காலை முதல் இதுவரை ஐந்து தொழிற்சாலைகளில் ஆழ்துளைக் கிணறுகளுக்கு சீல் வைத்துள்ளோம். மாலைக்குள் 19 தொழிற்சாலைகளில் சீல் வைத்து விடுவோம்” என்றார். மேலும் சீல்வைத்த ஆழ்துளைக் கிணறுகளை தொழிற்சாலை நிர்வாகத்தினர் திறக்க முயன்றால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
இதையும் படிங்க... தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளின் அறிவியல் கண்காட்சி