ETV Bharat / state

திருவள்ளூரில் புத்தகத் திருவிழா தொடக்கம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதலாவது புத்தகத் திருவிழாவை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் தொடங்கிவைத்தார்.

புத்தகத் திருவிழா தொடக்கம்
புத்தகத் திருவிழா தொடக்கம்
author img

By

Published : Apr 1, 2022, 12:37 PM IST

திருவள்ளூர்: மாவட்டத்தில் முதலாவது புத்தகத் திருவிழா 01.4.2022 முதல் 11.4.2022 வரை நாள்தோறும் காலை 11 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இதனை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் தொடங்கி வைத்தார்.

இதில் சுமார் 50 முதல் 60 ஆயிரம் வரையிலான தலைப்புகள் கொண்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. 11 நாள்கள் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் ஒரு தலைசிறந்த தமிழ் சொற்பொழிவாளரின் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் புத்தகங்கள 10 விழுக்காடு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முதல் 10,000 புத்தகம் வாங்கும் நபர்களுக்கு மரக்கன்றுகளும் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சி அரங்கிற்கு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் சென்று பார்வையிட்டார்.

புத்தகத் திருவிழா தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 25ஆவது ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை அவர் பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: விருதுநகர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிசிஐடி தீவிர விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.