பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேவையற்ற கழிவுகள், ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள். இது பழையன கழிதல் என்பதற்கு அடையாளமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும்.
ஆனால் தற்போது நகரவாசிகள் சுற்றச்சூழலை பாதிக்கும் வகையில் டயர், நெகிழிப் பொருட்கள், ரப்பர் போன்றவற்றை எரிக்கின்றனர். மேலும் உயர் நீதிமன்றம் பழைய மரம், வரட்டி தவிர வேறு எதையும் எரிக்கக் கூடாது என தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதை தடுக்கும் பொருட்டும் 'புகை நமக்கு பகை' என்பதை பொதுமக்கள் உணரும் பொருட்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்வை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆட்டோ ஒன்றில் சென்று பொதுமக்களிடம் கைப்பிரதிகள் கொடுத்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
இதையும் படிங்க:
விண்ணில் ஆராய்ச்சி செய்பவர்கள் மட்டும் விஞ்ஞானி இல்லை - மயில்சாமி அண்ணாதுரை