ETV Bharat / state

பிரியாணி கடையில் பணிபுரிந்த பீகார் இளைஞர் மர்ம மரணம்.. நேபாள இளைஞரை தேடும் போலீசார்! - Bihar youth murder

Bihar youth murder in Tiruvallur: திருவள்ளூர் ஏரிக்கரையோரப் பகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்து வந்த பீகார் இளைஞர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூரில் பிரியாணி கடையில் பணியாற்றிய பீகார் இளைஞர் அடித்து கொலை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 5:18 PM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் பேருந்து நிலையம் எதிரில், பொன்னேரி பகுதியைச் சேர்ந்த அஜீஸ் அகமது என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மோபியாரா என்பவரது மகன் ராஜா (20) என்பவர், கடந்த 6 மாதத்திற்கு முன்பு வேலைக்கு சேர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேபாள் நாட்டைச் சேர்ந்த ரோஹித் ஷர்மா என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது, தான் கொண்டு வந்த உடமைகள், ஆவணங்கள் எல்லாம் தொலைந்து போனதாக கூறியுள்ளார். இதனையடுத்து, கடை உரிமையாளர் அஜீஸ் அகமது, ரோஹித் ஷர்மாவை வேலைக்கு சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வேலை செய்பவர்கள் இரவு நேரத்தில் தங்குவதற்காக, திருவள்ளூர் ஏரிக்கரையோரம் சிறிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் தங்க வைத்துள்ளார். அதேபோல் உரிமையாளர் அஜீஸ் அஹமது தங்குவதற்கும் சிறிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, வேலை அதிகமாக இருக்கும்போது இரவு நேரத்தில் அங்கு தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு பீகார் மாநில இளைஞர் ராஜா உடல் நிலை சரியில்லாததால், உரிமையாளர் தங்கும் வீட்டில் படுத்துக் கொள்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். அதேபோல், நேபாள் நாட்டைச் சேர்ந்த ரோஹித் ஷர்மா, அங்கு சென்று படுத்துக் கொள்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து, நேற்று நள்ளிரவு 11 மணி வரை ராஜா மற்றும் ரோஹீத் ஷர்மா ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இன்று காலை ராஜாவும், ரோஹித் ஷர்மாவும் வேலைக்கு வராததால், கடையில் உடன் வேலை செய்பவர்கள் உரிமையாளர் தங்கும் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது.

பின்னர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது ராஜா கொலை செய்யப்பட்டு உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் ஏஎஸ்பி விவேகானந்தா சுக்லா, இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியம் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது ராஜாவை கொலை செய்வதற்கு பளு தூக்கும் கருவி பயன்படுத்தப்பட்டுள்ளதை போலீசார் உறுதி செய்துள்ளனர். பின்னர், கொலைச் சம்பவம் நடந்த பகுதிக்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ராஜாவின் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக்க அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகினறனர். மேலும், ராஜாவின் உடன் இருந்த ரோஹித் ஷர்மா தப்பி ஓடிய நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: காவல் நிலையத்திலேயே துணிகரம்.. தேனியில் இருவர் கைதானதன் பின்னணி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.