திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் சுஜாதா சுதாகர் தலைமையில் நடைபெற்றது.
இதில் விடையூர் கிராமத்தில் பழைய பள்ளி கட்டிடத்தை இடிப்பதற்கு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசன் என்பவருக்கு பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் கையெழுத்து போடுவேன் என கூறியுள்ளார்.
இதனையடுத்து கவுன்சிலர் ராணிசிவா என்பவர் ஒன்றியக்குழு கூட்டத்தில், கையில் பணம் எடுத்துவந்து ’என்னிடம் அவ்வளவு பணம் இல்லை’ என்பதால் குறைந்த அளவு உள்ளது என்றும், இதனை பெற்றுக் கொண்டு கையெழுத்து போட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் ராமன்கோவில் ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், ஒரே பெண்மணி வெவ்வேறு உறுப்பினர் அட்டையை வைத்து பெயர்களை மாற்றி மாற்றி இரண்டு வருடங்களாக தொடர்ந்து பணியாற்றி லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி வருவதாக புகார் கூறினார்.
இதையும் படிங்க: தாயகம் திரும்பிய கடைசி தமிழ்நாடு மாணவர்கள் குழு..! மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் நன்றி...