71ஆவது குடியரசு தினத்தையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு திட்டங்களைச் சீராகச் செயல்படுத்திய மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதக்கங்கள், பரிசுகளை வழங்கினர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கொடிநாள் நிதி வசூலில் சாதனைப் படைத்து, முதல் இரண்டு இடங்களைப் பிடித்தற்காக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பரிசு கோப்பைகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் அனைத்து துறை அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: 'ஒரே மாநிலம், ஒரே குடும்ப அட்டை' பிப். 1 முதல் சோதனை முயற்சி - குறைதீர் கூட்டத்தில் அறிவிப்பு