சென்னை: அஜித்குமார் துபாய் ரேஸில் பயன்படுத்தவுள்ள ரேஸ் கார் புகைப்படம் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ’விடாமுயற்சி’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’குட் பேட் அக்லி’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். குட் பேட் அக்லி திரைப்பட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடையவுள்ள நிலையில், அப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விடாமுயற்சி திரைப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அஜித்குமார் துபாயில் நடைபெறவுள்ள 24H Dubai 2025 & The European 24H Series Championship கார் ரேஸில் பங்கேற்கவுள்ளார். இந்த கார் பந்தயத்திற்கு தற்போது அஜித்குமார் தீவிரமாக ஆயத்தமாகி வருகிறார். இந்த கார் பந்தயத்தில் பயன்படுத்தவுள்ள கார், ஹெல்மெட் ஆகியவற்றில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) லோகோ பயன்படுத்தப்பட்டுள்ளது.
Latest Pics Of THALA AJITH With His Team From the Barcelona F1 Circuit In Spain 🇪🇸
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) November 27, 2024
Happiness In His Face ❤️😘#Ajithkumar | #AjithkumarRacing pic.twitter.com/MWKn91LvQC
இதற்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் குட் பேட் அக்லி படப்பிடிப்பை பல்கேரியாவில் முடித்துக் கொண்டு அஜித், கார் பந்தய பயிற்சிக்காக தற்போது ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார்.
Here’s the Much Awaited Video Of THALA AJITH’s Brand New Race Event Car For The 24H Series Dubai 🏎️💨
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) November 27, 2024
Porsche 992 GT3 Cup 💥#AjithkumarRacing | #GoodBadUgly | #Ajithkumar pic.twitter.com/1FCafWnRzm
இதையும் படிங்க: ”15 வருட காதல்”... தனது கணவர் பெயரை அறிவித்த கீர்த்தி சுரேஷ்!
அங்கு அவர் பந்தயத்தில் பயன்படுத்தவுள்ள காரை பார்வையிட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித்குமார் என பெயரிடப்பட்டுள்ள அந்த கார் வெள்ளை, சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. மேலும் அவரது துபாய் ரேஸிங் அணியினர் புகைப்படமும் வெளியாகியுள்ளது. அஜித்குமார் நடிப்பில் கடந்த 2 வருடங்களுக்கு முன் ’துணிவு’ திரைப்படம் வெளியான நிலையில், அஜித் ரசிகர்கள் குட் பேட் அக்லி திரைப்படத்தை மிகவும் எதிர்பார்த்து உள்ளனர். இது ஒரு புறம் இருக்க அஜித்குமார் துபாய் கார் பந்தயத்திற்காக மும்முரமாக தயாராகி வருகிறார்.
Here's Some More Ultimate HD Snaps Of THALA AJITH 😍
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) November 27, 2024
Core Team Of AK 🏎💥#AjithKumarRacing | #Ajithkumar pic.twitter.com/2WITR3U5w9
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்