திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மாபொசி சாலையில் உள்ள குப்பைத்தொட்டி ஒன்றில், பிறந்த சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை தொப்புள் கொடியுடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குழந்தையின் உடலை நாய்கள் கடித்து, இழுத்துச் செல்ல முயன்றபோது அதனை கண்டவர்கள் உடலைமீட்டு திருத்தணி காவல்துறைக்கு தகவல்தெரிவித்தனர்.
அதன்பின், அங்கு விரைந்த காவலர்கள் குழந்தையின் உடலை உடல்கூறாய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குப்பைத்தொட்டியுள்ள சாலையின் சிசிடிவி பதிவுகளை வைத்து குழந்தையை வீசியவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: நாய்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட நான்கு நாள் குழந்தை!