தமிழ்நாடு முழுவதும் சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செய்யப்படுகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் சி. நாயுடு சாலையில் 31ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில், டிஎஸ்பி கங்காதரன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் கண்ணபிரான், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், ரோட்டரி கிளப் நிர்வாகி குமரன் ஆகியோர் தலைக்கவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவித்து, ரோஜா மலர் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அப்போது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது, சாலைச் சந்திப்புகளில் வேகத்தைக் குறைக்க வேண்டும், சிக்னல் பெற்ற பின் முந்தவும் பாலங்களில் முந்த வேண்டாம், போக்குவரத்து சிக்னல்களை மதித்து நடக்க வேண்டும், செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டக் கூடாது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் அவர்கள் வழங்கினர்.
இதையும் படிங்க: அதிமுக ஆன்மீக ஆட்சியை நடத்தி வருகிறது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகழாரம்!