திருவள்ளூர் மாவட்டம் கொண்டமாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். லாரி ஓட்டுநரான
இவரது மனைவி அம்பிகா கடந்த எட்டு மாதத்திற்கு முன்பு உயிரிழந்தார். இதையடுத்து சிவக்குமார் தனது இரண்டு மகள்கள், மகன் ஆகியோருடன் கரடிபுத்தூர் பகுதியில் தனது மாமியார் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், தனது மைத்துனர் முருகனின் மனைவி சுலோச்சனாவிடம் நகை வாங்கி அடமானம் வைத்துள்ளார். அதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இருதரப்பினரும் பாதிரிவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் சிவகுமார் மனமுடைந்து
அவரது மனைவி புதைக்கப்பட்ட சமாதி அமைந்துள்ள இடுகாட்டில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த பாதிரிவேடு காவல் நிலைய காவலர்கள் அவரது உடலை மீட்டு உடற்கூராவிற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தவருக்கு காவல் துறை வலை வீச்சு!