ETV Bharat / state

ஊரடங்கால் வேலையிழந்த உதவி பேராசிரியர்: வருமானத்திற்காக பனை மரம் ஏறிய போது கீழே விழுந்து உயிரிழப்பு! - ஊரடங்கால் வேலையிழந்த உதவி பேராசிரியர்

திருவள்ளூர்: ஊரடங்கால் வேலை இழந்த தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் வருமானத்திற்காக நுங்கு வெட்ட சென்ற போது பனைமரத்திலிருந்து கீழே விழுந்து பரிதாபாமாக உயிரிழந்தார்.

death
death
author img

By

Published : Jun 7, 2021, 10:33 PM IST

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் கணித உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் லோகநாதன் (35). இவர் தனது மனைவி கவிதா, பிரியன் (2) ஆகியோருடன் அலமாதி என்னும் கிராமத்தில் வசித்துவந்தார். கவிதா தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

கரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வேலையிழந்த லோகநாதன், வருமானம் இழந்து குடும்பம் நடத்த மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதனைப் போக்கும் விதமாக அவ்வப்போது கிடைக்கும் கூலி வேலைக்கு லோகநாதன் சென்றுள்ளார்.

அந்தவகையில், பனை மரத்தில் நுங்கு வெட்ட லோகநாதன் சென்றார். அப்போது எதிர்பாரதவிதமாக பனை மர உச்சியில் இருந்து லோகநாதன் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு லோகநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

death
குடும்பத்தினருடன் லோகநாதன்

லோகநாதன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவி, இரண்டு வயது குழந்தைக்கு அரசு உதவவேண்டுமென கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.