திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பண்ணுர் ஊரில் வசித்து வருபவர் ஜாபி. இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் ஜோலி, இன்று(ஆக.22) காலை தோட்டத்திற்கு நீர் பாய்ச்ச சென்றபோது செடிகளின் நடுவே விசித்திரமான ஒரு மிருகத்தைப் பார்த்துள்ளார்.
அம்மிருகம் அங்கும் இங்கும் ஓடியதே தவிர, அவருடைய தோட்டத்தைவிட்டு வெளியே போகவில்லை. உடனே அம்மிருகத்தைப் பிடித்த அவர் உடனடியாக வனத்துறை அலுவலர்களுக்குத் தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினருக்கும் தோட்டத்தில் சுற்றியது என்ன விலங்கு என்று தெரியவில்லை.
இதைத் தொடர்ந்து பிடிபட்ட விலங்கு எந்த இனத்தைச் சார்ந்தது என்று கண்டறிந்து, அதனுடன் விடப்படும் எனக்கூறி உடன் எடுத்துச் சென்றனர். விசாரணையில் அவ்விலங்கு ஆசிய மர நாய் இனத்தைச் சேர்ந்தது என்றும், பூண்டி காப்புக்காட்டில் இருந்து தப்பித்து வந்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அனைவருக்கும் புரியும் மொழியில் அரசு இயங்க வேண்டும் - கமல்ஹாசன்