ETV Bharat / state

'பெரியார் சிலையை உடைத்தவர்களைக் கைது செய்க' - திக

திருவள்ளூர்: பெரியார் சிலையை உடைத்த ஆர்எஸ்எஸ் அமைப்பினரை கைது செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம், திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் பொன்னேரியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியார் சிலை முன்பு திக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Apr 9, 2019, 3:00 PM IST

அறந்தாங்கியில் பெரியார் சிலையை உடைத்து அவமரியாதை செய்த ஆர்எஸ்எஸ் அமைப்பினரைக் கண்டித்து, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலை முன்பு திராவிடர் கழகத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திராவிடர் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மேலும், இதுபோன்று சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரை கைதுசெய்யவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திராவிடர் கழக மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ராணி, நகரச் செயலாளர் சுதாகர், மதிமுக ஒன்றியச் செயலாளர் எழிலரசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை தமிழ் மறவன், திமுக மாணவரணி விக்னேஷ், உதயன் நகர திமுக பொருளாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் இதில் கலந்துகொண்டனர்.

பெரியார் சிலை முன்பு ஆர்எஸ்எஸுக்கு எதரிராக நடைபெற்ற திக ஆர்ப்பாட்டம்

Intro:அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலையை அவமதித்த அவமதிப்பு உடைத்தெறிந்த சமூக விரோதிகளை கைது செய்யக்கோரி பொன்னேரியில் பேருந்து நிலையம் எதிரே உள்ள தந்தை பெரியார் சிலை முன்பு திராவிடர் கழகத்தினர் திமுகவினர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Body:திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலை முன்பு திராவிட கழகத்தினர் மாநில அமைப்பினர். செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் அறந்தாங்கியில் பெரியார் சிலையை உடைத்து அவமரியாதை செய்த சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ராணி நகர செயலாளர் சுதாகர் மதிமுக ஒன்றிய செயலாளர் எழிலரசன் திராவிட இயக்கத் தமிழர் பேரவை தமிழ் மறவன் திமுக மாணவரணி விக்னேஷ் உதயன் நகர திமுக பொருளாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

visual ftp

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.