திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் லட்சுமிபுரம் பகுதியில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கிருமி நாசினி தெளிக்குமாறு, மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி சபையின் தேசியத்தலைவர் செல்வகனேசன் அறிவுறுத்தினார்.
இதன்பேரில் மாவட்ட தலைவர் சேகர், மாவட்ட பொருளாளர் கார்த்திக், துணைப் பொருளாளர் ராஜேஷ் ஆகியோருடன் கிராம இளைஞர்கள் சேர்ந்து அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளித்தனர்.
மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கிருமி நாசினி தெளிக்க, குடங்களில் பிடித்துச் சென்றனர்.
இதையும் படிங்க: மதுராந்தகம் நகராட்சி நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி தெளிப்பு!