அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று திருவள்ளூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் எதிரே 500க்கும் மேற்பட்டோர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில், முன்னாள் முதல்வரால் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு ஊழியர்களாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை உடனே அமல்படுத்த வேண்டும், அகவிலையுடன் கூடிய ஓய்வூதியம், முறையான குடும்ப ஓய்வூதியத்தை அறிவித்திட வேண்டும். பணி ஓய்வு பெறுகின்றபோது பணிகொடையாக ஊழியர்களுக்கு ரூபாய் 10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூபாய் 5 லட்சமும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதையும் படிங்க:
’விலங்குகளிடம் கருணை காட்டாத யாருக்கும் நாமும் கருணை காட்டக்கூடாது'