திருவள்ளூரில் தனியார் திருமண மண்டபத்தில் பாமக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களைச் சந்தித்து உரையாற்றினார். அப்போது அவர், ”திமுக ஆட்சி செய்த காலத்தில் துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் எதுவும் செய்யாமல் விட்டுவிட்டு எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு தற்போது குறை கூறிவருகிறார்.
நான் புளுகுமூட்டை ஸ்டாலின் என்று அவருக்கு பெயர் வைத்திருக்கிறேன். ஏனென்றால், நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், கச்சத்தீவு, காவிரி பிரச்னை போன்ற அனைத்திலும் கையெழுத்திட்டு விட்டு தற்போது அவற்றையெல்லாம் சரிசெய்யப் போவதாக பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார். அதனால்தான் அவரை புளுகுமூட்டை என்று கூறுகிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவை ஏரியில் கட்டப்பட்டிருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது என்றும் ஒரு லட்சம் கோடி தன்னிடம் இருந்தால் அனைத்து நீர் பிரச்னைகளையும் தீர்த்து வைப்பதாகவும் அதன்மூலம் இன்னும் இருநூறு ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வராது என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை திமுக வெற்றி? - அமைச்சர் கே.சி. வீரமணி உளறல்!