பிரஜோஷ் அறக்கட்டளை, போலீஸ் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா, போலீஸ் நீயூஸ் பிளஸ் சார்பில், அப்பத்தூரில் இன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு, சென்னை மாவட்ட தலைவர் ஸ்டீபன், தமிழ்நாடு வடக்கு மண்டல தலைவி ஈவ்லின் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினராக அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கண்ணன் கலந்துகொண்டு முகாமை பார்வையிட்டார்.
அம்பத்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு இரத்த பரிசோதனை, கண் பரிசோதனை, இரத்தக் கொதிப்பு பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை ஆகியவற்றை இலவசமாக செய்துகொண்டனர். மேலும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந் காவல் துறையினரும் உடலை பரிசோதனை செய்துகொண்டனர். இந்த மருத்துவ முகாமில் இருநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது உடலை பரிசோதனை செய்துகொண்டு பலனடைந்தனர்.